siruppiddy

9/7/13

ஆபத்தான நாடுகள் பட்டியலில் ஒன்பதாமிடத்தில்!


 சர்வதேச ரீதியில் ஆயுத வன்முறை காரணமாக ஆபத்தான பட்டியலில் சிறீலங்கா ஒன்பதாம் இடத்தை பிடித்துள்ளது.
ஜெனீவாவில் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் ஆயுத வன்முறைகள் காரணமாகப் பாதிக்கப்படுபவர்கள் தொடர்பான விளக்கப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த யூன் மாதம் 25ம் திகதி வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் ஆயுத வன்முறை காரணமாக ஒவ்வொரு நிமிடமும் ஓர் உயிர் இழக்கப்படுவதாகவும் ஒவ்வொரு ஆண்டும் வன்முறை காரணமாக அரை மில்லியன் மக்கள் (526 000) மரணமடைவதாகக் குறிப்பிட்டுள்ளது.
இவர்களில் 10 வீதமானவர்களே மோதல்கள் காரணமாக இறக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கப்படத்தில் முதலாவதாக மிக ஆபத்தான நாடாக எல் சல்வடோரும் இரண்டாவதாக ஈராக்கும் காணப்படுகிறது. தொடர்ந்து ஒன்பதாவது இடத்தில் இலங்கை காணப்படுவது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆயுத வன்முறை இன மத தோதல்கள் காரணமாக ஏற்படும் இறப்புக்கள் அதிகரித்து வருவதாக மேலும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக