siruppiddy

6/7/13

மத்திய மற்றும் வடமத்திய மாகாணசபைகள் கலைக்கப்பட்டன



மத்திய மற்றும் வட மத்திய மாகாணசபைகள் நேற்றைய தினம் நள்ளிரவு கலைக்கப்பட்டுள்ளது. இரண்டு மாகாணங்களினதும் ஆளுனர்களான டிக்கிரி கொப்பேகடுவ (மத்திய மாகாணம்) மற்றும் திஸ்ஸ ஆர். பலல்ல (வடமத்திய மாகாணம்) ஆகியோரினால் மாகாணசபைகள் கலைக்கப்படுவது குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் கையொப்பமிடப்பட்டுள்ளன.
 குறித்த இரண்டு மாகாண சபைகளினதும் உத்தியோகபூர்வ ஆட்சிக் காலம் எதிர்வரும் 2014ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த இரண்டு மாகாண சபைகளுக்குமான தேர்தல்கள் எட்டு மாதங்களுக்கு முன்னதாகவே நடத்தப்படவுள்ளது.
 இதேவேளை, வடமாகாண சபையை நிறுவுவதற்கான தேர்தல்களை நடாத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றைய தினம் உத்தரவிட்டிருந்தார். இதன்படி, வடமத்திய, வட மற்றும் மத்திய மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் பெரும்பாலும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி அல்லது 28;ம் திகதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் வாரமளவில் வேட்பு மனுக் கோருதல் தொடர்பிலான வர்த்தமானி அறிவிப்பை தேர்தல் செயலகம் வெளியிடும் என தெரிவிக்கப்படுகிறது,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக