siruppiddy

18/7/13

தேர்தல் குழப்பம் ஏற்பட்டால் படையினர் களமிறக்கப்படும்!


 வடக்கு மாகாணத்தில் தேர்தல் பணிகளுக்காக காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்படுவர் எனவும் எனினும் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டால் படையினர் களமிற்கப்படுவர் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை தேசிய பாதுகாப்பு குறித்த எவ்வித அரசியல் கட்சிகளுடனும் இணக்கம் ஏற்படுத்தப்படமாட்டாது என்று பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலை முன்னிட்டு முன்வைத்துள்ள சில கோரிக்கைகளை நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதில் முக்கியமாக படை முகாம்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் விடுதலை செய்ய்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளே நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் வடக்கில் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துமாறும் இடம்பெயர்ந்தவர்களை விரைவில் மீள்குடியேற்றுமாறும் விடுக்கப்பட்ட கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக