siruppiddy

12/7/13

தேர்தலை இலக்கு வைக்கும் சிங்கள கடும்போக்குவாத


 மாகாணசபை முறைமையை இல்லாதொழிக்க வேண்டுமென கூச்சலிடும் சிங்கள கடும்போக்குவாத கட்சியான ஜாதிக ஹெல உறுமய எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலை குறி வைத்துள்ளது.

13வது திருத்தச்சட்டத்தையே இல்லாமல் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வரும், ஜாதிக ஹெல உறுமய, வரும் செப்ரெம்பரில் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இடம்பெற்றுள்ள ஜாதிக ஹெல உறுமய, வெற்றிலைச் சின்னத்தில் மத்திய, வடமேல் மாகாணசபைகளுக்கு வேட்பாளர்களை நிறுத்துவதென கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த இரு மாகாணங்களிலும், உள்ள ஐந்து மாவட்டங்களில் தலா ஒரு வேட்பாளரை நிறுத்த இடம் ஒதுக்கும்படி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிடம் ஜாதிக ஹெல உறுமய கோரவுள்ளது.

அமைச்சர் சம்பிக்க ரணவக்க தலைமையிலான குழுவிடம் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, வட தமிழீழத்தில் நடத்தவுள்ள தேர்தலில் போட்டியிட ஜாதிக ஹெல உறுமய ஆர்வம் காட்டவில்லை என்று அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

0 கருத்துகள்:

கருத்துரையிடுக