siruppiddy

26/7/13

அல்பெர்ட் கம்பெல் சதுக்கத்தில் சனிக்கிழமை யூலை 27 மாபெரும்



கறுப்பு யூலை நினைவு ஒன்றுகூடல்- ஆறாத வடுக்களாக தமிழர் உள்ளங்களில் பதிந்த நெருப்பு நினைவுகள் யாவும் ஆழமாகப் பதித்து நிற்கின்றன. யூலை 1983 இலங்கைத் தீவில் தென்னிலங்கைத் தமிழர் மீதும் சிறைச்சாலைகளில் இருந்த தமிழ்க் கைதிகள் மீதும் இனவாத சிறிலங்கா அரச பின்னணியோடு சிங்களக் காடையர்கள் கட்டவிழ்த்த கொடிய இன அழிப்பு நடைபெற்று30 ஆண்டுகள் கடந்து நிற்கின்ற நிலையிலும் இன்றும் தொடர்கின்றன. சிறிலங்கா இனவாத அரசாலும் சிங்கள இன வெறியர்களாலும் தமிழ் மக்கள் மீதான கொடிய இன அழிப்பு நடவடிக்கைகளால் முடிவிலா துயரங்களில் மூழ்கிக் கிடக்கும் எம் தாயகத் தமிழினத்தை காத்து எம் மண்ணின் விடுதலையையும் எம் மக்களின் மறுவாழ்வையும் உறுதி செய்வது புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் கடனாகும். மறுக்கப்பட்ட எமக்கான நீதியை வென்றெடுக்கும் வரையில் நீதி நோக்கிய எம் போராட்டங்கள் தொடரப்பட வேண்டும்.
உலகளாவிய ரீதியில் மீண்டும் நீதிவேண்டி உரிமைவேண்டி தமிழர் நடாத்தும் மாபெரும் கறுப்பு யூலை நிகழ்வு சனிக்கிழமை யூலை 27ஆம் நாள் 2013 மாலை 6 மணிக்கு அல்பெர்ட் கம்பெல் சதுக்க (Albert Campbell Square - Scarborough Civic Center) முன்றலில் நடைபெறவுள்ளது.
 இடம்: அல்பெர்ட் கம்பெல் சதுக்கத்தில்
(Albert Campbell Square - Scarborough Civic Center)
காலம்: யூலை 27, சனிக்கிழமை
நேரம்: மாலை: 6:00 மணி
ஜுலை 83 ல் படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளை நினைவு கூர்வதுடன், போர்குற்றங்கள் குறித்து சிறீலங்கா மீது சுயாதீனமான சர்வதேச விசாரணை மேலும் தாமதமின்றி உடன் நடாத்தப்பட வேண்டும். போர்க்கைதிகள் அனைவரும் உடனடியாக சர்வதேச கண்காணிப்பில் கொண்டுவரப்பட வேண்டும், போர்க்கைதிகள் நிபந்தனையின்றி விடுவிக்கப்படவேண்டும். மனித உரிமைகளை சிறீலங்கா மதிக்கும் வரை, இராஐதந்திர, பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் ஓன்றுகூடல் நடைபெறவுள்ளது.
சர்வதேசமும், மனித உரிமை அமைப்புக்களும் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கின்ற இவ்வேளையில் புலம் பெயர் தமிழர்களாகிய நாங்கள் ஒன்றுபட்டு ஒரே குடையின் கீழ் தமிழின அழிப்பையும், ஐ.நா தலைமையில் தமிழீழ சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பையும் முன்நிறுத்தி எம் இனத்தின் விடிவிற்காக ஒவ்வொரு தமிழனும் ஒற்றுமையாக ஒன்றுகூடுவோம்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக